இப்பொழுதும் வாழ்வு முழுவதும் கல்லூரிக் காலமாகவே இருந்திருக்கலாம், இப்பொழுதும் நண்பர்கள் ரூமில் தங்கி படித்திருக்கலாம், இப்பொழுதும் நண்பன் மறைத்து வைத்த டிபன் பாக்ஸில் உள்ள ஆம்லெட் காணாமல் போயிருக்கலாம், தோழிகளுக்கு திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம், இப்பொழுதும் 'love u', 'miss u' சொல்லிக் கொண்டு இருந்திருக்கலாம், இப்பொழுதும் வார்த்தைகளின்றி பக்கத்தில் அமர்ந்திருக்கலாம், இப்பொழுதும் தொடுதலின் அடித்தளின் அன்பை உணர்ந்திருக்கலாம், இப்பொழுதும் கெட்ட வார்த்தைகளின் அர்த்தம் உணராமல் இருந்திருக்கலாம், இப்பொழுதும் கையை பிடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்திருக்கலாம், இப்பொழுதும் திரும்ப பார்க்க ஆசை இருந்திருக்கலாம், இப்பொழுதும் நண்பர்களை மன்னித்து ஏற்கும் மனது இருந்திருக்கலாம், இப்பொழுதும் நாளின் பெரும்பகுதி அன்பில் திளைத்திருக்கலாம், இப்பொழுதும் தனிமையை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம், இவ்வளவு ஏன், இப்பொழுதும் வாழ்ந்திருக்கலாம்...
முப்பது வயதுக்கு முன்பு கண்ட கனவெல்லாம் இப்பொழுது கேள்விக்குறியாக நீள்கிறது, தன்னை மட்டும் மையப்படுத்தி வாழ்ந்த வாழ்க்கையில் இப்பொதெல்லாம் நான் இருக்கிறேனா என்பது கூட தெரியவில்லை, நண்பர்கள் அந்நியமானார்கள், சக அலுவலக ஊழியர்கள் நாட்களை நீட்டித்தார்கள், காதல் கசந்தது, காமம் கசந்தது, நினைவுகள் கசந்தது , சின்ன விஷயங்களில் காணும் மகிழ்ச்சி கசந்தது, பெருள் தேடி அலைகிற வாழ்வில் பொருளற்று போகிறது வாழ்க்கை, இனி கடமைகள் தான் வாழ்க்கையா இல்லை கடமைக்கு தான் வாழ்க்கையா என எண்ணச் செய்கிறது, இருந்தும் வாழ்க்கையின் அழகே அது மறைத்து வைத்திருக்கும் அடுத்த நொடி ஆச்சரியங்கள் தான், இலக்கற்ற பறவையாய் சேமித்து வைத்த நினைவுகளுடன் பயணிப்போம் இளைபாற இடமும், அன்பை பரிமார உறவும் இருந்தால் போதும்....
நாம் அனைவரும் தொலைக்கிறோம், எதையோ தேடுகையில், பின்பு தான் உணர்கிறோம் தொலைத்தது தான் வாழ்க்கை என்பதை. வாழ்வு, நிகழ்கால தருணங்களிலிருந்து கடந்த கால நினைவுகளாக ஆன பின்பு மீண்டும் தேடி செல்கிறோம் தொலைத்த நினைவுகளை... என்றுமே நாம் தொலைத்தது வந்து சேருவதும் இல்லை, நினைவுகளும் தொலையப்போவதுமில்லை... ***** உன் பிறிவு என் வாழ்வில் பெரிதாக எதையும் நிகழ்த்தவில்லை, என் மீதும் என் வாழ்வின் மீதும் ஒரு வெருப்பை ஏற்ப்படுத்தியது அவ்வளவுதான்..
Nice 👏
ReplyDelete