முப்பது வயது


முப்பது வயதுக்கு முன்பு கண்ட கனவெல்லாம் இப்பொழுது கேள்விக்குறியாக நீள்கிறது,

தன்னை மட்டும் மையப்படுத்தி வாழ்ந்த வாழ்க்கையில் இப்பொதெல்லாம் நான் இருக்கிறேனா என்பது கூட தெரியவில்லை,

நண்பர்கள் அந்நியமானார்கள்,
சக அலுவலக ஊழியர்கள் நாட்களை நீட்டித்தார்கள்,

காதல் கசந்தது, காமம் கசந்தது,
நினைவுகள் கசந்தது ,
சின்ன விஷயங்களில் காணும் மகிழ்ச்சி கசந்தது,

பெருள் தேடி அலைகிற வாழ்வில் பொருளற்று போகிறது வாழ்க்கை,
இனி கடமைகள் தான் வாழ்க்கையா இல்லை கடமைக்கு தான் வாழ்க்கையா என எண்ணச் செய்கிறது,

இருந்தும் வாழ்க்கையின் அழகே அது மறைத்து வைத்திருக்கும் அடுத்த நொடி ஆச்சரியங்கள் தான்,
இலக்கற்ற பறவையாய் சேமித்து வைத்த நினைவுகளுடன் பயணிப்போம் 
இளைபாற இடமும், 
அன்பை பரிமார உறவும் 
இருந்தால் போதும்....

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

தொலைத்தது