இப்பொழுதும்

இப்பொழுதும்


வாழ்வு முழுவதும் கல்லூரிக் காலமாகவே இருந்திருக்கலாம்,
இப்பொழுதும் நண்பர்கள் ரூமில் தங்கி படித்திருக்கலாம்,
இப்பொழுதும் நண்பன் மறைத்து வைத்த டிபன் பாக்ஸில் உள்ள ஆம்லெட் காணாமல் போயிருக்கலாம்,
தோழிகளுக்கு திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம்,
இப்பொழுதும் 'love u', 'miss u' சொல்லிக் கொண்டு இருந்திருக்கலாம்,
இப்பொழுதும் வார்த்தைகளின்றி பக்கத்தில் அமர்ந்திருக்கலாம்,
இப்பொழுதும் தொடுதலின் அடித்தளின் அன்பை உணர்ந்திருக்கலாம்,
இப்பொழுதும் கெட்ட வார்த்தைகளின் அர்த்தம் உணராமல் இருந்திருக்கலாம்,
இப்பொழுதும் கையை பிடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்திருக்கலாம்,
இப்பொழுதும் திரும்ப பார்க்க ஆசை இருந்திருக்கலாம்,
இப்பொழுதும் நண்பர்களை மன்னித்து ஏற்கும் மனது இருந்திருக்கலாம்,
இப்பொழுதும் நாளின் பெரும்பகுதி அன்பில் திளைத்திருக்கலாம்,
இப்பொழுதும் தனிமையை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்,

இவ்வளவு ஏன்,
இப்பொழுதும் வாழ்ந்திருக்கலாம்...

Comments

Popular posts from this blog

முப்பது வயது

தொலைத்தது