தீபாவளி நாட்கள்

தீபாவளி நாட்கள்

வருடத்திற்கு ஒரு நாள்தான்,
அதனால் குடும்பத்தின் எல்லோரின் ஆசையையும் நிறைவேற்ற துடிக்கும் அப்பாவுக்கு தீபாவளியன்று மிஞ்சியது  பட்டிமன்றமும்,
ஓரே ஒரு சட்டையும் தான்....
***

தீபாவளி,
கொண்டாட்டம் நிறைந்தது என்பதால்,
அம்மாவுக்கு,
இன்று மாறாக,
புது புடவையுடன்,
அதே அடுப்பங்கரை எண்ணெய் சட்டிக்குள் வானவேடிக்கை...
***

செய்த அவமதிப்பிற்கும், திட்டிய கடுஞ்சொல்லிற்கும்,
வருடத்திற்க்கு ஒரு முறை,
ஆத்தாவிடமே,
அவள் உள்ளங்கை எண்ணெயால் 
எங்கள் உடல் முழுவதும் தடவச் செய்து,
மன்னிப்பை பெருகிறோம்..
***

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது