கோவிலும் கழிவரையும்
எங்கள் ஊரின் ஒற்றுமைக்காக எல்லோரிடமும் நன்கொடை வாங்கி ஒரு கோவிலை கட்டினோம்,
சிலரை கருவரையில் அமர்த்தினோம்,
சிலரை பிரகாரத்தில் அமர்த்தினோம்,
சிலரை கோபுரத்துக்கு வெளியே நிற்கச் செய்து குடமுழுக்கை மட்டும் பார்க்க செய்தோம்,
சிலரை கோவில் கழிவரையை மட்டும் சுத்தம் செய்ய வைத்தோம்,
இவையெல்லாம் கடவுளின் துணைக்கொண்டு தான்,
ஏனெனில் கடவுள் எல்லொருக்கும் பொதுவானவர்...
Comments
Post a Comment