புது வீடு
இனி
எங்கள் வீட்டின் உள்ளே மழை பேயப்போவது இல்லை,
அந்த மழைத் துளிகளை சேகரிக்க பாத்திரங்களை தேடி எந்த கால்களும் ஓட வேண்டிய அவசியமில்லை,
உறவிணர்கள் தங்க அவர்களுக்கு வசதி குறைவாக இருக்கப் போவதில்லை,
விருந்தினருக்கு கழிவறை உபயோகிக்க சங்கடம் நேரப் போவதில்லை,
ஆனால் சூற்றியுள்ள உறவிணர்களுடன் உன்டான நீண்ட உரையாதல் நிறைந்த மாலைப் போழுதுகள் இனி வாய்கப் போவதில்லை,
இனி வரப் போகும் எந்த வசதிகளும் மனித உரவுகளின் அருகாமையை அளிக்கப் போவதில்லை,
வீடு முழுவதும் மனிதர்கள் நிறைந்த நிகழ்ச்சிகளுக்கு இனி வாய்க்குமா என்று தெறியவில்லை,
பழைய வீடு என சொல்லிக் கொள்ளவும் வாழவும் அவமானமாக இருந்தாலும் அது நினைவுகளால் ஆனது,
புது வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தாலும் செங்கல்லால் ஒரு போதும் நினைவுகளை பிரதிபளிக்க முடியாது,
எங்களுடைய வீடு என்பதைவிட நம்முடைய வீடு என்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்..
கடந்துப் போவது தான் வாழ்க்கை ஆனால் கடப்பதில் தான் எவ்வளவு துயரம்..
Comments
Post a Comment