புதிதாய் மாறிய உறவு


என் துயரத்தில் நீ இல்லை என்றதிலிருந்து
எனக்கு கொஞ்சம் இடைவேளி தேவை என்ற வார்த்தையில் என்னை நிறுத்திவிட்டாய்,
எனக்கு தான் குழப்பம் நான் இதில் எங்கு நிற்க்க வேண்டும் என்று.... 

நம் வாழ்வு என்ற நட்பு இன்று அவரவர் குடும்பம் என்றானது..

நீ கதவை அடைத்தது நீ வெளியில் வாராமல் இருக்கவா இல்லை எனக்கு உள்ளே அனுமதி இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் குறைந்தது சாவி இடைவேளியிலாவது நான் செல்ல இருக்கிறது என்று நிம்மதி அடைகிறேன்..


என் நன்பன், Made for each other என்ற வார்த்தைகள் இன்று கால சூழ்நிலையில்  செத்த பாம்பாகி அடிபடுகிறது

அவரவர் வாழ்க்கை துயரங்கள் என்று சிந்திக்கும் பொழுது , இந்த பத்து வருட நட்பின் நினைவுகள் நம்மை கேளி செய்கிறது

இது நட்ப்பா காதலா எந்த உறவு என்ற என்னம் முன்பு எனக்கு வரக்கூடும், அனால் இப்பொழுது புரிகிறது இது தூரத்து உறவை விட தூரம் சென்று வேடிக்கை பார்க்கும் உறவு என்று.

இதில் மகிழ்ச்சி என்ன வென்றால் நீ தைரியத்துடன் உன் துயரங்களை எதிர்க்கொள்வதை காண்பது மட்டும் தான்...

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது