வயதுக்கு வருதல்
வயதுக்கு வருதல்
மழலை வீசும் உன்னிடம்,
மங்கையின் விதிகளை எப்படி திணிப்பது,
ஆடி வரும் தேனே,
உன் சிறகை எப்படி கட்டி வைப்பது,
பிறர் கோவத்தை தாங்கிக்க முடியாத நீ,
இனி வரும் வலியை எவ்வாரு பொருத்துக் கொள்வாய்,
பாரம் சுமக்காத உன் கையில்
இன்று குடும்ப கௌரவத்தையும், சமூக அழுத்தத்தையும் தரவுள்ளோம்,
நீ அழுகையில் கைக்குட்டையை எடுக்க பதறிய என் கையால் இன்று சானிடரி நாப்கினை கொடுக்க என் மனதில் உதிரம் கசிகிறது,
உன் இந்த நாளை அனைவரும் கொண்டாடினாலும்,
ஒருநாள் என் கண்டிப்பு அன்பை மீறிவிடுமோ என்ற ஐயத்தில் நான்,
கல்லில் கடவுளை தேடுவது போல
குழந்தையில் பெண்ணை தேடுவது எவ்வளவு அற்பம்,
என் ஆசையெல்லாம் ஒன்று தான்,
எந்த தயக்கமும் இன்றி உன்னை எப்போழுதும் அள்ளி அனைத்திடல் வேண்டும்
நீ மொட்டிலிருந்து மலராக தொடங்கி விட்டாய்,
என் மனமோ மலர மறுக்கிறது!
கார்த்திக்ராஜ்
Comments
Post a Comment