பெஸ்டி

தாய்க்கு பிறகு அவள் பாதுகாப்பிற்கு ஏங்கும் உயிர்,

தகப்பனுக்கு பிறகு அவளிடம் காமத்தை உணரா உறவு,

உடன் பிறப்பை தாண்டி அவளுக்காக கரையும் கண்ணீர்,


கனவனை தாண்டிய உரையாடலும்,
காதலனை தாண்டிய புரிதலும்


இவனிடம் மட்டுமே அவள் தன்
கர்வத்தை இழக்கிறாள்,
இவனிடம் மட்டுமே அவள்
ஆண் பெண் என்ற எல்லையை மறக்கிறாள்,
அவனும் இவளிடம் தான் தனக்குள் தோன்றும் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான்,


திருமணத்தை தவிர மற்ற எல்லா மகிழ்ச்சியும் அவளுக்கு கிடைக்க ஏங்கும் மனது,
அனைவரும் எள்ளி நகையாடிய போதும்
காதலை விட நட்பு பெரிதாய் நினைத்து,


காமத்தை சேரா அனைத்திலும், தலைச் சாய்யுதலும் ,
வலித்தாலும் அடிக்காக ஏங்கும் உடலும்,
பிரிந்தாலும் நீங்கா நம்பிக்கையும்,


இது காமத்திற்க்கும் திருமனத்திற்க்கும் அப்பார்பட்ட காதலோ என வியர்ந்து
ஒருநாள் அவள் இனிமேல் தன்னுடையவள் இல்லை என தெரிந்தும் நினைவுகளை அனைத்துக் கொண்டு வாழ்கிறான்.....

கார்த்திக் ராஜ்

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது