வலிகள்


யாருக்கு தான் மழை பிடிக்காது !எனக்கும் பிடித்திருந்தது 

அது என் வீட்டின் வெளியே தூரும் வரையில்



   ***

நட்புககொள்ளவும் நேரமில்லை,
காதல்கொள்ளவும் ஆசையில்லை,
உறவுக்கும் பயனில்லை,
சட்டைப்பையும் மாசமில்லை,
சுற்றித் திரியவோ வழியில்லை,
அனைக்க இருப்பதோ கனவுதான்,
அதை வெளியில் சொல்லியோ 
பயனில்லை,
நங்கு வளர்ந்த மரங்களுக்கு நடுவில் வளரும் ஒரு சிறிய செடியின் மனநிலையில் நகர்கிறது இளமை...

***


கடவுளை மட்டுமே பார்க்கும் விழிகளுக்கு,
மனிதனின் வலி எப்படி தெரியும்...
***


திருமணத்திற்கு பின் வாடகை வீடாக மாறிய மாமியாரின் வீடு அவமானமாக இருந்தது,
ஆனால் அதற்கு காரணமான வரதட்சணை அவமானமாக இல்லை..

***


இமைகளின் நோக்கம் பிறர் அழுகையை காணாதிருப்பது தானோ

***

ஏழைக்கு சாவும் கூட எட்டாக் கணி தான்...

***
இளமையின் சுவை அறியாமல்  நகர்கிறது வாழ்க்கை, கனவின் துனைக்கொண்டு..

***

பிறர் வாட, அவருக்கு உதவ நினைப்பதை விட மேன்மையான அறிவு  உண்டோ

***

வருமையில் காணும் கனவுகலே மார்க்ஸை அரிமுகபடுத்தியது

***

நான் உன் கனவனில்லை என்றாலும் , உன்னை என் காதலியாக நினைத்து பல நேரங்கள் கலித்தேன் - அரைமணி நேரத்திற்க்கு 5 ரூபாய் வாடகை சைக்கிள்

***

உலகில் அனைவருக்கும் தேவைகள் இருக்கிறது, அந்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு உயிரும் பிறக்கிறது

***

இன்று நமக்கு கிடைத்த உயர்வு வெரும் உழைப்பினால் மட்டும் வந்ததல்ல அது காலத்தின் பல சுரந்தல்கலாலும் கிடைத்தது....

***

எல்லா உயிர்களும் மண்ணில் மனிதம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் பிறக்கிறது

***

நீயேல்லாம் உன் உரிமையை அடிபனிந்து தான் கேட்க வேண்டும் என்று நினைப்பதே வன்முறை தான்....

***

உன் மடி சாய்ந்த என் கண்ணமும்
என் தோள் சாய்ந்த உன் கண்ணமும்
பொய்யாக்குமடி உன் கோவத்தை

***


மனிதம் சுமக்கும் ஆசையில் என் சுமையை உறவுகள் மீது திணித்தேன்...

***

விலகி இருப்பதில் தான் எவ்வளவு துயரம்,
குடும்ப உரையாடலிருந்து,
நட்பின் அணைப்பிலிருந்து,
உறவுகளின் இனக்கத்திலிருந்து,
இளமையின் கிளர்ச்சியிருந்து,
கடைசியில் கனவுகளிருந்து... 
11/12/2022 11:30








Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது