மௌனம்

 



வழக்கம் போல் அம்சவள்ளி தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தாள். அவள் உட்கார்ந்து இருக்கும் தரை சற்று அமுக்கி இருந்தது. அனைத்து அம்சங்களும் மறைந்த முகம், அழுகிய தக்காளியைப் போன்ற சர்மம், அவளின் குறுகிய உடம்பு அவளை தான் கைக் குழந்தையாக மாறிவிடுவமோ என என்ன வைத்தது.


எப்போழுதோ நேர்ந்த சந்தோசத்தையும், இனி எப்போது கிட்டும் என்ற ஏக்கத்தையும் நினைத்துக் கொண்டு, எண்ணத்திற்க்கும் ஏக்கத்திற்க்கும் நடுவே மிதக்கும் தோணியாய் அமர்ந்திருந்தாள்.


சாலையில் நடந்து செல்பவர்களை அவளது கண்கள் தன்னிடம் வந்து அமரும்படி கெஞ்சியது. ஆனால் அனைவரும் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் மும்முரமாக இருந்தன. சில சிறுவர்கள் பையை தாங்கிக் கொண்டு மூட்டை தொழிலாலியைப் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களின் சட்டையின் வெண்மையை விட அவர்களின் முகம்  வெண்மையாக தெரிந்தது. இது அவளை அவளின் குழந்தை பருவத்திற்கு அழைத்து சென்றது.

அவள் அவளது பெற்றோருக்கு ஒரே பெண் குழந்தை என்பதால் அவளுக்கு எப்பொழுதும் அவள் பெற்றோரிடமும் தன் 6 அண்ணன்களிடமும் ஒரு தனி முக்கியத்துவம் இருந்தது. அது அவளின் திருமண வாழ்விலும் தொடர்ந்தது. தனக்கு பெரிதாக சொத்துகள் இல்லை என்றாலும் அவள் அவளை ஒரு ராணியாக உணர்ந்தாள். அவளுக்கு மூன்று பிள்ளைகள், இரண்டு ஆண் ஒரு பெண் குழந்தை. மூத்த மகன் வெளிநாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்தான், மகள் பக்கத்து ஊரில் தனது குடும்பத்துடன் வாழ்ந்தாள். கடைசி மகனுடன் இவள் வாழ்கிறாள், அவனுக்கு இரண்டு பையன்களும் உண்டு. கணவன் மறைந்த பின்பு கணவன் இருந்த இடத்தில் அவளின் பிள்ளைகள் வந்தனர். சாப்பாடு , சண்டை என்று எந்த பிரச்சனையும் இல்லை. அவள் அவளது பிள்ளைகளிடம் அவர்களின் குறள் களை தவிர வேறு எதுவும் எதிர் பார்ப்பது இல்லை. அவளுக்கு அவள் நாட்டின் மீது பெரிய பாசம் இருந்தது. காரணம் அவளின் மருத்துவ செலவுகள், அவள் விரும்பிய மீண், அவள் பேரன் பேத்தியின் ஆசையைகள் போன்ற அனைத்தையும் அரசு தரும் முதியோர் உதவித் தொகை நிரை வேற்றின. அந்த உதவித் தொகை அவளின் பிள்ளைகள் அவள் மீது வைத்திருந்த அன்பை குறையாமல் இருக்கவும் உதவியாகவும் இருந்தது.


வாழ்க்கை கூனுன்றி நடந்து சென்றுக் கொண்டு இருந்தது. காலம் ஒவ்வொருவரையும் ஒரு சமயங்களில் முக்கியமானவர்களாய் வானுக்கு தூக்கிக் கொண்டாட வைக்கும், அதே காலம் அவர்களை முக்கிய மற்ற மண்ணில் உள்ள புழு வாகவும் மாற்றும். அந்த காலம் அவளுக்கும் வந்தது. தன்னை சுற்றி உலகமே இருந்த நிலை போக  இவள் உலகை சுற்றிவரும் நிலைமைக்கு ஆளா னாள். இந்த நிலை தன் கடைசி நாளை எதிர்பார்க்கவும் வைத்தது. இருந்தாலும் அவளின் கடைசி பையன், அவன் மனைவி மற்றும் அவளின் பேரண்களின் முகங்கள் அவளின் மனதின் தோட்டத்தில் பூக்களாய் பூத்தன.

இது எப்போழுதும் ஞானம்பால் வரும் நேரம், ஆனால் அவளை இன்னும் காணும் என ஏங்கிய கண்கள் அவள் வரும் பாதையை பார்த்துக்கொண்டு இருந்தது. ஞானம்பால் தனக்கே உரிய நடையில் தனது மூன்று காலில் கண்ணாடியோடு  நடந்து வந்ததை பார்த்த சந்தோஷத்தில் அம்சவள்ளியின் கண்முலிகள் கீழே வீழும் அளவுக்கு விரிந்தன. அந்த கண்ணாடீயை பார்ப்பதற்க்கு சினிமா நடிகையைப் போல தெரிந்ததால் இன்றும் சிரித்தாள் அம்சவள்ளி. அம்சவள்ளியின் காது, கிளம்ப கார்த்து இருக்கும் ரயிலைப் போல ஞானப்பாலின் கதையை கேட்க புகைப் பரப்ப கார்த்துதிருந்தது. அம்சவள்ளி ஞானப்பால் வீட்டிற்கு போகும் பழக்கம் இப்போழுது இல்லை, அம்சவள்ளியின் தலைமுறைகள் எல்லாம் ஞானப்பால் வீட்டில் தான் வேலை செய்தனர், அந்த நிலை இப்போது இல்லை என்றாலும் ஞானப்பாலின் வீட்டில் உட்கார்ந்து பேசும் அளவுக்கு அம்சவள்ளிக்கு மனது இல்லை. அதனால் ஞானப்பால் இங்கே வந்து விடுவாள். அவர்கள் இருவரும் நாம் தான் நம் கதையை கேட்க வேண்டும் என்ற உண்மையால் இருவரும் இளம் காதலர்களைப் போல நேரம் போகாதது போல பேசிக்கொண்டு இருப்பார்கள். இன்றும் அப்படியே இருந்தன. ஞானப்பால் வழக்கம் போல அவள் வீட்டில் அவள் படும் இன்னல்களை கூறினால். வாசல் கோலம் போட ஏதுவாய் உள்ளது போல அவளின் கண்ணீர் தரையை கழுவியது. அதை மறக்க வைக்க அம்சவள்ளியும் வேறு எதாவது பேசுவாள். ஆனால் அம்சவள்ளிக்கு தன் வாழ்க்கையில் அப்படி எந்த துன்பமும் நேராதது சற்று நிம்மதியாக இருந்தது. சாலைகளில் வேகமாக நடந்து செல்பவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு அப்படியே பேசிக் கொண்டு இருந்தனர்.நாளை என்ன பேச வேண்டும் என்று இரவு யோசிக்கும் அளவுக்கு பேசினர். பின்பு ஞானம்பால்  கிளம்பினாள். கிளம்பும் போது இன்னைக்கு தேதி 1 என்பதை நியாபக படுத்தினாள் அம்சவள்ளி, ஞனாம்பாலும் சாப்பிட்டு வருவதாக கூறினாள் . ஞானம்பால் சென்ற பின்பு அம்சவள்ளிக்கு ஞானம்பாலின் கண்ணை பற்றிய கவலை இன்றும் வந்தது.

மதியம் உணவு முடிந்தது. ஞானம்பாலும் வந்தாள். இருவரும் மகிழ்ச்சியாக வங்கிக்கு சென்றனர். ஆனால் இந்த மாதம் தீபாவளி இருப்பதால் இருவரின் முகங்களில் பொலிவு சற்று கம்மியாகவே இருந்தது. அம்சவள்ளி தனது மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் நடந்தாள். சீர் வரிசை தட்டு நிறைய இவர்களின் மருந்து டப்பாகளில் உள்ள மருந்துகள் குறையும்,  அதனால் இந்த மாதம் இருவருக்கும் எப்படியாவது ஓட்ட வேண்டும் என்று நினைத்து கோண்டு இருவரும் நடந்தனர். பணத்தை எடுத்து தன் மணி பர்சில் வைத்து தன் மார்பில் வைத்து கொண்டடு இதமாக இருந்தது. வீட்டிற்கு திரும்ப நடந்தனர். வரும் வழியில் ஒரு ஐஸ் வண்டிக்காரன் நின்றுக் கொண்டிருந்தான். அதை பார்த்தவுடன் ஞனாம்பால் ஆசையில் கரைய ஆரம்பித்தாள். அம்சவள்ளிக்கும் ஆசை பற்றி கொண்டது. சரி என்று இரண்டு பேரும் ஐஸை வாங்கினர். அம்சவள்ளி தன் ஐஸை வாயில் வைக்க போகும் நேரத்தில் அருகில் உள்ள பள்ளியில் மணி அடித்தது, அம்சவள்ளிக்கு பேரனின் நியாப்பகம் வந்தது, அவள் இன்னோரு ஐஸை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டாள். ஞானப்பால் சாப்பிட்டுவிட்டு எடுத்து செல்லலாம் என்று சொன்னதுக்கு பேரண்கள் இல்லாமல் நான் சாப்பிட ஒரு மாதிரியாக இருக்கு என்று கூறி வேகமாக நடந்தாள். ஐஸ் கரைவதற்க்குல் வீட்டில் நுழைந்தாள். பேரண்களிடம் கொடுத்தாள், அவனின் பற்க்கள் தெரிந்தன.

சோகத்தின் இருள் வந்தது.
இனிமேல் ஞானம்பாலை நாளை தான் காணமுடியும். வீட்டில் உள்ள அனைவரும் அவருக்குள் பேசிக் கொண்டு இருக்க இவள் வேடிக்கை பார்க்கும் பொம்மையாக இருப்பாள். வீட்டில் உள்ள அனைவரும் இவள் மீது அன்பு வைத்தாலும், அனைவரும் இவளிடம் பேச விஷயம் இல்லை என்ற எண்ணத்தில் இருந்தனர். தொலைக்காட்சியின் சத்தமே அதிகமாக இருந்தது. தன்னை முக்கியமாக நினைக்கும் ஜீவன் யாரும் இல்லை என்ற நிலை அவளை மெல்ல சாக அடித்தது. முதுமை எவ்வளவு கொடியது என்று ஒவ்வொரு நொடியும் காட்டிக் கொண்டே இருந்தது. தன் நோயை காட்டிலும் இந்த மௌனமே அவளுக்கு வலியை அதிகமாக தந்தது. இருந்தாலும் அவளை பார்த்துக் கொள்ள பிள்ளைகள் இருப்பது சற்று ஆருதலாக இருந்தது. இந்த நிலைக்கு அவளின் பிள்ளைகள் வரக் கூடாது என்று வேண்டினாள்.

மறுநாள் காலை ஞானம்பால் வரவில்லை, அம்சவள்ளி நாளை தனியாக களித்தாள். அடுத்த நாளும் வர வில்லை ,அம்சவள்ளி ஞானம்பால் வீட்டில் சென்று பார்த்தாள். ஞானம்பால் வீட்டிற்கு வெளியே கிடந்த கட்டிலில் படுத்து இருந்தாள். அம்சவள்ளி அவள் அருகில் சென்று கூப்பிட்ட பின் ஞானம்பால் கதறி அழு ஆரம்பித்தாள். ஞானம்பாலுக்கு இரு கண்ணின் பார்வையும் போயிற்று. இதை அம்சவள்ளியால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை, அழுத படியே தன் வீட்டிற்கு சென்றாள். ஞானம்பால் கண்ணை இழந்தாள் அம்சவள்ளி தனக்காக கேட்ட ஒரு குறலையும் இழந்தாள்.

இந்த சோகத்திலிருந்து வெளியே வர அம்சவள்ளிக்கு ஒரு வாரம் ஆனது. மீண்டும் ஞானப்பால் வீட்டில் சென்று பார்த்தாள், கட்டிலும் இல்லை அவளும் இல்லை. ஞானப்பாலின் மகன் ஏதோ சொல்ல வந்தான்,
அம்சவள்ளிக்கு அவன் ஞானப்பாலை எங்கு அனுப்பிருப்பான் என்று தெரிந்தது. கண்ணீரில் நீந்தி தன் வீட்டிற்கு நுழைந்தாள்.

காலம் நடந்தன. அதே திண்ணையில் அவள் மட்டும் உட்கார்ந்து இருந்தாள். ஏக்கங்கள் நிலையாகின. காதுகளில் ஒட்டடை பிடித்தது. தீடிரென அவளது கண்கள் மழைத் தூறல் பட்ட கண்ணாடியை போல தெரிவதை உணர்ந்தாள். இப்போது அம்சவள்ளியின் கண்ணீர் அவளது வீட்டு வாசலை நனைத்தது. செய்வதன்றி உள்ளே போய் தன் கட்டிலில் படுத்தாள்.

மீண்டும் எழவில்லை. இப்போது அவள் கண்கள் அழைக்காமல் அருகில்  அனைவரும் வந்தனர். சிலர் கண்களால் அழுதனர், சிலர் வாயால் அழுதனர். அவளது பிள்ளைகள் அவள் அருகில் சென்று சத்தமாக கதறி அழ, அவள் மௌனமாக இருந்தாள்.


கார்த்திக் ராஜ்.

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது