எங்கும் நிறைந்தவை

 புதிய வாழ்வை தொடங்கப்போகும் மகிழ்ச்சியில் ராமன் தனது உடைகளை புதிதாய் வாங்கிய பையில் வைத்தான். தனது வீட்டில் தூரத்தில் இருக்கும் கொல்லையில் உள்ள உள்ளாடையை எடுத்து வருமாறு வாயனிடம் சொன்னான். வாயன் தான் யார் என்றும் தன் பெயர் என்ன என்றும் அறியாத குழந்தை போல, தனது வயதை எண்ணுக்குள் அளக்க அறியாது தனது வயதை மீசையிலும் தாடியிலும் நிறைத்த மயிர்களை வைத்து தன் வயதினை அறிபவன். அவனுடைய பெற்றோர் கூத்தாடிகள் என்றும் அவனை சிறு வயதில் இந்த கிராமத்தில் விட்டு விட்டு சென்றனர் என்று ஊரில் பலர் கூறுவார்கள். வாயன் தனது சிறு வயது முதலே ராமன் வீட்டில் வேலை செய்து வருகிறான். வாயன் என்ற பெயர்,ஊரில் உள்ள 'தான் அழகன்' என்று கருதும் நபர்களால் அவனுக்கு வைக்க பட்ட பெயர்.  வாயனுக்கு வயது அதிகமாக இருந்தாலும் அவனை டா போட்டு கூப்பிடும் பெருந்தன்மை உடையவன் ராமன்.



பேருந்திற்கு மணியாகிவிட்டது, ராமன் சாப்பிட்டு விட்டு அமர்ந்திருந்தான். அவன் வேலைக்காக ஊருக்கு செல்கிறான் என்று அறிவதற்காக புதிதாய் வாங்கிய செருப்பை துடைத்து வைக்குமாறு ராமனின் தந்தை மாரிமுத்து வாயனிடம் கூறினான். ராமன் தான் நேரில் பார்த்திராத தனது தாத்தாவையும் பாட்டியையும் தன் தந்தையை கொடுத்து தன்னை படிக்க வைத்ததற்காக அவர்களின் புகைப்படங்களை வணங்கினான்.தனது தாத்தா பாட்டி புகைப்படங்களுக்கு பக்கத்தில் அம்பேத்கர் உருவ புகைப்படமும் இருந்தது. அது மாரிமுத்து தனக்கு கிடைத்த அரசாங்க வேலைக்காக அவன் வைத்த வழிபாடாகும். அம்மா தான் ஒரு பெண் என்பதை மறந்து விதவைகள் யாரும் இருக்கிறார்களா என்று தெருவில் பார்க்க ராமன், மாரிமுத்து மற்றும் வாயான் பேருந்து நிலையத்திற்கு கிளம்பினர்.


பேருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தது. ராமன் பேருந்தில் எறும்போது 'காலம் கழிந்தது கனவுகள் பிறந்தது' என்ற பாடல் அவனை தானாக படிகளில் தூக்கியது. அவனும் அதே சந்தோஷத்தில் அவன் விரும்பிய ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தான். பேருந்து கிளம்புவதற்காக பின்னே வந்த போது 'பத்திரமாக இருங்கள் சின்னையா' என்று வாயன் சொன்ன வார்த்தை பேருந்து புகையில் கரைய ராமன் மாரிமுத்துக்கு மட்டும் கையசைத்தான். பல இடங்களிருந்து உருவாகும் ஆறு கழிமுகத்தை அடைவதை போல அவனும் சென்னையை நோக்கி சென்றான்.


ராமன் முதல் நாள் தனது அலுவலகம் முன்பு நின்று அன்னார்ந்து பார்த்தான், இதுவரை வானம் தூரம் என்று நினைத்த அவன் இப்போது இந்த கட்டிடத்தை பார்த்தவுடன் இதன் கடைசி மாடிக்கு சென்றால் வானத்தை அடைந்துவிடலாம் என்று நினைத்து பெரும்முச்சி  விடும் காற்று முன்னே உள்ள வரின் மீது பட அவனுக்கு முன்னே உள்ள வரிசை நீன்டு இருந்தது.


உலகத்தை ஒரு பெட்டியாய் செய்து  மேசையில் வைத்திருக்கும் அவனுக்கான இருக்கையில் அமர்ந்தான்,  மஞ்சள் மற்றும் எண்ணெய் வாசமில்லாமல் செயற்கை நருமனம் விசும் பெண்கள் அவனை ஈர்த்தனர். அவனுக்கு வேலை கற்றுகுடுப்பதற்காக ஒரு நபர் இருந்தான். அவன் பெயர் வெங்கட்ராமன் , அந்த அலுவகத்தில் மிக திறமைமிக்கவன் இருந்தாலும் கனமான தலையை உடையவன். வெங்கட்ராமன் ராமனுக்கு அவன் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்து கற்றுக்கொடுக்கும் போது சில பகுதிகள் ராமனுக்கு விளங்கவில்லை எனவே ராமன் திரும்ப திரும்ப கேட்டான்.கேள்விகளின் என்னிக்கை வர்னாக்களை தாண்ட வெங்கட்ராமன் சக்தியையும் பொருமையையும் இழந்தான். வெங்கட்ராமன் கடைசியாக எல்லோரும் எல்லாயிடத்திலும் சரிசமமாக அமர்ந்தால் இதான் நிலமை என்றான்.


வெங்கட்ராமன் சட்டையில் இடையில் தெரிந்த பூனுலை போல ராமனின் அவமானம் எட்டிப்பார்த்தது.

கார்த்திக்ராஜ்

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது