மறுபடியும்

 சித்ரா அனைவரும் கோலம் போடும் நேரத்தில் இஸ்திரிப் பெட்டியில் உள்ள நெருப்பை ஊதிக் கொண்டு இருந்தாள். அவள் கழுத்தில் உள்ள தாலி கயர் அந்த கரி வண்ணத்தில் இருந்தது. காலையில் கூடி பேசுவதே வேலையாய் கருதும் ஆண்களிடம் சேகர் பேசிக் கொண்டு இருந்தான். இஸ்திரிப் பெட்டி சூடாகி விட்டது என்று சித்ரா சத்தமிட அவன் ஓடி வந்து தன் வேலையை தொடர்ந்தான். சித்ரா செருப்பை மாட்டிக்கொண்டு தன் வேலைக்கு சென்றாள்.


அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு 4 வருடங்களாக வீட்டில் இருக்கிறாள். இளையவள் 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறாள். அவர்களுக்கு திருமணம் ஆன காலத்தில் இஸ்திரி கடையில் வியாபாரம் நன்றாகவே இருந்தது. ஆனால் சிறிது வருடத்திற்குள் சென்னை பெருநகரம் ஆனது. இது நல்லதா கெட்டதா என்று அவர்கள் நினைப்பதற்குள் அங்கு கட்டிடங்கள் உயர் வதைப் போல அவர்கள் வாழ்க்கையின் விலையும் உயர்ந்தது. விலைவாசி உயர்வை அந்த இஸ்திரிப் பெட்டியின் நெருப்பால் ஈடு செய்ய முடியவில்லை. பெண்களுக்கு கல்வியை விட கல்யாணமே முக்கியம் என்று கருதும் சாதாரண பெற்றோர்கள். மூன்று வேலை உணவிற்கும் இரண்டு பெண்களின் திருமணத்திற்கும் உழைத்து வருகின்றனர்.


ஒருவழியாக இருந்த காசையும் கடனும் வாங்கி மூத்த மகளின் திருமணத்தை முடித்தனர். நாட்கள் செல்லச் செல்ல அந்த கடன் அவர்கள் உணவையும் மரியாதையையும் குறைந்தன. வேறு வழியின்றி நாட்களை கடந்து கொண்டு இருந்தனர். இளைய மகளும் 12 ஆம் வகுப்பை முடித்தாள். சோகம் அதிகம் ஆனது.

சூரியன் வருவதற்குள் சித்ரா எழுந்தாள், வீட்டில் சேகரை காணவில்லை. இரவு வரை அவன் திரும்ப வில்லை . காவல் நிலையத்தில் புகார் செய்தாள். மாதங்கள் கழித்து. கடன் கொடுத்தவர்கள் எல்லாம் வீட்டு உள்ளே வந்து காசை  கேட்கும் அளவிற்கு சென்றது. இஸ்திரிப் கடையையும் அவர்கள் எடுத்துக் கொண்டனர். அவளுக்கு சேகர் மீது உள்ள கோபத்தால் அவள் அந்த கடையை கேட்க வில்லை.

அவள் சமையல்காரி யாக சில வீட்டில் வேலை செய்தாள். பெண்ணுக்கு கணவனைவிட கல்வி தான் முக்கியம் என்பதை சேகரால் அவள் உணர்ந்தாள். அந்த எண்ணத்தால் அவள் மகளை மேலும் படிக்க வைத்தாள்.

காலம் செல்ல அவள் கடனும் குறைந்தது. அவள் மகளும் வேலைக்கு சென்றாள். இருந்தாலும் சித்ரா வேலைக்கு செல்வதை நிறுத்தவில்லை. இரண்டாம் மகளுக்கும் திருமணம் நடந்தது. இப்போழுது சித்ரா தனது மூன்று வேளை உணவிற்காக வேலைக்கு சென்றாள்.

ஒரு நாள் சேகர் திரும்பி வந்து சித்ரா முன்பு நின்றான். சித்ராவை போல அவனும் இளைத்து போய் ஒரு நோயாளியைப் போல் இருந்தான்.

அவள் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் கருணையும் கூட பெண் விடுதலைக்கு எதிரானதே.

கார்த்திக் ராஜ்

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது