நிறங்கள்
மகாலட்சுமி இன்றும் வழக்கம்பொல் காக்கைக்கு சாதம் வைத்தால். அம்மாவாசையும் இல்லை. அதிகம் ஈர்க்காத பரவை ஒன்று இருப்பின் அது காகம்தான் , காரணம் அதன் நிறமாக இருக்கலாம். மகாலட்சுமி தன்னை காகத்தோடு ஒப்புக்கொள்வதாலொ என்னவோ அதன்மீது ஒரு தனிக்கருனை.
மகாலட்சுமி அதிகம் கண்ணாடி பார்ப்பதில்லை, கண்ணாடி தனது முகத்தை திருப்பிக்குமோ என்ற ஒரு முட்டால்தனமான பயம். மகாலட்சுமியின் தங்கை இப்போதெல்லாம் சரியாக பேசுவதில்லை காரணம் மகாலட்சுமிக்கு வரன் எதுவும் அமையாததால் தனது திருமணம் தள்ளிப்போவதால் உன்டான கடுப்பு. அவளது தங்கைக்கு நிறைய வரன் வந்துக்கொன்துதான் இருக்கிறது.
மகாலட்சுமி கல்லூரியில் அதிகம் பேசுவது சமிராவிடம் தான். காரணம் முதல் இரண்டு இடத்தை பெறுவதே வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்து கொண்டு இவ்விருவரும் இருப்பதாலோ அல்லது கண்களை மட்டுமே காட்டும் சமிராவின் நிலையாக கூட இருக்கலாம். அவள் வகுப்பில் உள்ள அனைவர்கனின் வட்டத்திற்குள் நுழையாமல் இருந்தாள் மகாலட்சுமி . வகுப்பில் சக மாணவர் மாணவிகளிடத்தில் மகாலட்சுமி தன்னை ஒரு திருநங்கையாக உணர்ந்தாள். கடவுள் எளியவர்கலை புறப்பனிப்பது போல, மகாலட்சுமியையும் அந்த வகுப்பு புறக்கணித்து.
ஒரு வழியாக அவளுக்கு பல வருடம் கழித்து ஒரு வரன் அமைந்தது. மகாலட்சுமியின் தங்கைக்கும் அவளுக்கும் பாசம் மொட்டித்தது. ஆனால் இந்த வரனால் தனது முக்கால்வாசியான நிலத்தை விற்க வேண்டும் என மகாலட்சுமியின் தந்தை சோகத்தில் இருந்தார். மின்னும் தங்கம் தானே விலை அதிகம் மகாலட்சுமிக்கு ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்ற நக்கலுடன் மகாலட்சுமியின் தங்கை கண்ணாடியில் தனது பொழுதை எப்போதும் போல போக்கிக்கொண்டு இருந்தாள்.
அந்த நாளும் வந்தது, திருமணம் செய்துக்கொல்ல இருக்கும் குமார் தனது வீடு குடிசையிலிருந்து மாடி கட்டடமாக ஆகப்போகும் மகிழ்ச்சியில் அவன் தாலியை கட்ட மேலமும் நாதசுவரமும் தனது சத்தத்தால் அதை நிருபனம் செய்தது. மகாலட்சுமியைவிட குமார் வென்மையாக இருந்ததால் மனிதர்களின் லொல்லா என்ற சிரிப்பு மேலத்தை விட சத்தமாக அடித்தது.
குமாரின் வீடு வலர்வதை போல மகாலட்சுமியின் வயிரும் வலர்ந்தது. ஆனால் புகுந்த வீட்டிலும் காக்கைக்கு சாதம் வைக்கும் நிலை தொடரும் நிலை தான் இருந்தது. மகாலட்சுமியின் பல ஆண்டுகள் அழகையினால் அவளின் இரு கண்ணங்களில் இரு கொடுகள் உருவாகின மற்றும் அவளின் கண்ணிரால் முகம் சற்று வெண்மையாகின.
வலியால் மகாலட்சுமியை மருத்துவ மனையில் அனுமதித்தனர். குழந்தையும் பிறந்தது குமார் தனது பெண் குழந்தையை பார்த்துவிட்டு மகாலட்சுமியை கடும் தீயாய் பார்த்தான். அந்த பார்வையில் அவள் இன்னும் கருத்தாள். அவள் பலரின் அருகில் அம்மனமாக படுத்திருப்பது போல் உணர்ந்தாள்.
சிறிது வருடங்களுக்கு பிறகு மகாலட்சுமியும் அவள் மகளும் ஒன்றாய் காக்கைக்கு சாதம் வைத்தனர்.
கார்த்திக் ராஜ்
Comments
Post a Comment