உறவுகள் தொடர்கதை

  மஞ்சு நேற்றைய நாளை நினைத்து குளித்து கொண்டிருந்தாள். தாலியில் இருக்கும் மஞ்சள் கழுத்து முழுவதும்  வழிந்தன.சிறு வயதிலுருந்து முன்பின் தெரியாதவர்களை பூச்சாண்டி என்று சொல்லி வளர்த்த சமுகம் அவளை பூச்சாண்டி இடம் ஒப்படைத்தது. நேற்று இரவு அவள் பெற்றார்களே அவளை தாசியைப் போல் மகிழ்ச்சியாக பூச்சாண்டியிடம் அணுப்பியதையும், இவள் பொம்மையாக கிடந்ததையும் நினைக்கையில் அருனின் நியாபகம்மும் வந்தது. கண்ணீர் அவள் உடலில் உள்ள சோப்பை நீக்கியது. அருனை மறந்து விடலாம் என்று நினைக்கும் நேரத்துக்குள் அவளுக்கு இந்த சடங்கு நடந்து விட்டது. புதிய இடமாக இருந்தாலும் அவளின் சொகம் அதை நினைவுப் படுத்த வில்லை. அவள் குலியலறையை விட்டு வெளியே வருகையில் பிரிக்க படாத சீதணங்கள் அப்படியே இருந்தன. இனிமேல் தனது வேலை குறைந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் பூச்சாண்டி யின் அம்மாவின் கால் ஒரு மேசையில் ஆடிக்கொண்டு இருந்தது. பூச்சாண்டி யின் தங்கை இவளைப் பார்த்துத் சிரித்தாள் அதற்கான அர்த்தம் மஞ்சுவுக்கு புரிந்தது.


அறைக்குள் நுழைந்தாள், பூச்சாண்டி எதோ தனது வாழ்வின் பெரும் பலனை சாதித்து விட்டோம் என்ற திருப்தியில் தூங்கிக்கொண்டு இருந்தான். அவன் பெயர் தியாகு என்பது இப்போது தான் அவளுக்கு நியாப்பகம் வந்தது.
அவள் கண்ணாடி முன்பு நின்று புடவையை கட்டினாள், மீண்டும் அருனின் யோசனை. அவர்கள் இருவருதைய பல தலைமுறைகளுக்கு முன்னால் வாழ்ந்த தாத்தன்கல் ஏன் வேறு வேறு தொழிலை செய்தனர் என்று யோசிக்கையில் அருனின் முகம் கண்ணாடியில் தெறிவதாய் உணர்ந்தாள். அவள் இதையதில் எங்கோ ஒரு அழுத்தம் ஏற்ப்பட்டு கண்ணங்களை நனைந்து.

மதியம் மறு விருந்து, அவள் விட்டிற்கு இருவரும் ஜோடியாக சென்றனர். மஞ்சுவுக்கும் அவளது பெற்றோருக்கும் கடைசி இரண்டு மாத கசப்பான நினைவுகளை அவர்களின் முகங்களில் பிரகாசித்தது. அனால் அவளது பெற்றோரின் சந்தோசத்தை விட இவளது சோகம் அதிகமாக பிரகாசித்தது. இது அவர்கள் மூவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது. மஞ்சுவின் தம்பி தன் நாயை தியாகுவிடம் காட்டிக்கொண்டு இருந்தான். அவன் கையில் புதிய மோதிரம் இன்னும் இருப்பதை தியாகு பார்த்தான். அந்த நாய் அவன் சொன்ன அனைத்தையும் யோசிக்காமல் செய்துக்கொண்டு இருந்தது. மஞ்சு பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் வாழ்வும் அந்த நாயை போலத்தான் இந்த வீட்டில் இருந்ததா என்று நினைத்துப் பார்த்தாள்.

அவள் பெற்றோருக்காக வாழ்ந்தாள், அவளின் பெற்றோர் அவளை சமுகத்திற்காக வலர்த்தனர். சிறு வயதில் இருந்தே அவள் பெற்றார் வார்த்தையின் உருவம்மாகவே இருந்தால். அவளின் வாழ்க்கை தீர்மானிக்கும்
விளையாட்டு பொருட்களே அவர்கள் வாங்கித் தந்தனர் அதன் விளைவாக அவள் சமைக்க கற்றுக் கொண்டாள், அவளின் அனைத்து அசைவையும் கவனிப்பதற்காக வலையல்கலும் கொலுசுகளும் உதவின இதை இவள் கண்டு பிடிக்க கூடாது என்பதற்காக அது தங்கமாகவும் வெள்ளியாகவும் மாறின .
அவர்கள் வாங்கித் தரும்
உடையையே உடுத்தினால்,  சிறு வயதிலிருந்தே நன்றாக  படித்தாள் ஆனால் அவை அனைத்தும் தொலைக்காட்சி மேல் இருக்கும் புகைப்படத்திர்கும், ஒரு பையிலை நிரையவும் மட்டுமே பயன்பட்டது,
அவளுக்கு வேலைக்கு செல்லும் ஆசை இருந்தது ஆனால் தன் தந்தையின் கௌரவித்துக்காக அதை மறந்தாள். அவள் பெரியவள் என்று அவளது பெற்றோர் சமுகத்திற்கு காட்டியதிலுந்து அவர்களே இவள் யாரிடம்மேல்லாம் பேசலாம் என்பதை தீர்மானித்தனர். ஆனால் அவளுக்கு இந்த செயல்கள் எல்லாம் பெரிதாக தெரியவில்லை காரணம் இதுவே புனிதம் என இந்த சமுகம் அவளையும் நம்ப வைத்தது. இருந்தும் தான் எப்படி கல்லூரியில் அருனை காதலித்தேன் என்பதை நினைத்துப் பார்த்தாள். கலாச்சாரத்தை விட இயற்கை வலிமையானது என்று நினைத்துக் கொண்டாள். இயற்கை அவளுக்கு அன்பிர்க்கும் காதலுக்கும் உள்ள வேற்றுமையை கற்றுக் கொடுத்தது.

வீடு திரும்பினர், வண்டியில் செல்லும் போது தியாகுவின் கண்கள் வழியில் உள்ள பெண்களை ஆராய்ந்ததை மஞ்சு உணர்ந்தாள். இவளை மயக்க  வேண்டும் என்ற அர்ப்ப ஆசையில் அவன் வண்டியை வேகமாக ஓட்டினான்.   வீட்டை அடைந்தனர், வாசலில் செருப்புகள் தரையை மறைத் தன. உள்ளே நுழைந்ததும் பல முகங்களின் பார்வை அவள் கண்ணை கூசியது. முதலாய் பார்க்கும் பல முகங்கள் இருந்தாலும் பல நாள் பழகியது போல் பேச வேண்டும் இல்லை என்றால் ஆகங்காரக் காரி என்ற பட்டம் கிடைக்கும் என்பதால் மெல்ல பேச முயற்சித்தாள். ஆனால் தியாகு வாங்க என்று கூறினால் போதும் அந்த அமைதி  அவனுக்கு தங்கமாணவன் என்ற பட்டத்தை கொடுக்கும், அல்லது அதிகமாக பேசினால் மிக நல்லவன் என்ற பட்டத்தை கொடுக்கும் .

காலங்கள் நடந்தன , தியாகுவின் அம்மாவும் தங்கையும் சற்று பெருத்தனர். இவளது உள்ளங்கைகள் இன்னும் வெண்மை ஆகின. அந்த வீட்டின் கக்குஸ் பிரகாசமாக ஜொலித்தது. இளையராஜாவும் ஜெயகாந்தனும் அவளின் இருக்கையை பிடித்து மேலே ஏற்றினார்கள். அந்த வீட்டில் அவள் பேசும் ஓசையும் கேட்க ஆரம்பித்தன. அவள் பொம்மையாக இருக்கும் நிலமையும் குறைந்தன. அருனின் நியாப்பகம் மங்க ஆரம்பித்தது. தியாகு வும்  தனது அர்ப உணர்ச்சிகளின் ருசி குறைய உணர்வோடு பேச ஆரம்பித்தான்.

தியாகு தான் மேன்மை யானவன் என்று கருதிக் கொல்லும் பெரும்பாலான சாதாரணமான ஆண். தன்னை அவ்வாறு அனைவரிடமும் காட்ட நினைக்கும் குணம் உடையவன். மஞ்சுவிக்கு இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வமே இல்லை காரணம் அதன் வேலையை தியாகு செய்து கொண்டு இருந்தான், இதிலும் ஒரு வழி பேச்சி தான். அவனை அவள் வெகுளி யாக நினைத்தாள். ஆனால் பல இரவுகள் கடந்தாலும் அவனை அவள் பூச்சாண்டி யாகவே உணர்ந்தாள்.

இது தான் தன் வாழ்க்கை விதி என அவள் நினைக்கும் நாளும் வந்தது, அந்த நாளே அவளுக்கான முதல் ராத்திரி யாகவும் இருந்தது. தனது உணர்ச்சி அனைத்தையும் அவள் மீது இறக்கிய களைப்பில் அவன் அவள் பக்கத்தில் கிடந்தான். பிறகு வழக்கம் போல தன் பெருமையை பேச ஆரம்பித்தான். அவன் தனது பழைய காதலி பற்றி கூறினான் அது மஞ்சுவை அவனிடம் இன்னும் இனைய செய்தது. அந்த காதலிக்கும்  அவனுக்கு ஏற்பட்ட உணர்ச்சியின் எல்லை பற்றி கர்வமாக கூறினான். ஆனால் இது எதுவுமே மஞ்சுவின் மனதிற்குள் செல்லவில்லை. இதை அவன் கூறுவதற்கான காரணம் அவளிடம் எதையும் மறைக்க கூடாது என்பதற்காக அல்ல, தனது பெருமையை மஞ்சு உணர்ந்து அவனை அடைந்ததற்கு மஞ்சு பெருமை கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் மஞ்சு தன்னைப் போல் இவனும் எவ்வளவு துன்ப்பத்திருப்பான்  என்று மட்டுமே நினைத்து கரைந்தாள்.

ராமனும் ஒரு ஆண் என்பதை மறந்ததை போல, இவளின் கதையை கூற ஆரம்பித்தாள், அவளின் கண்ணீர் அவனின் தலையணையையும் நனைத்தது. இப்போது அவள் பல நாள் கழித்து மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தாள்.
அவன் எழுந்து உட்கார்ந்து கொண்டு அதுவும் நடந்ததா என கேட்டான். அவளுக்கு அந்த கேள்வி ஆச்சிறியத்தை ஏற்படுத்தியது. அவள் பெண் என்பதால் அவளுக்கு காமத்தை விட காதலே பெரிதாக இருந்தது. அவன் மறுபடியும் கெட்டான் இப்போது இவன் சொல் நான்கு செவுறில் பட்டு அவள் காதில் சத்தமாக விழுந்தது. அவள் கீழே பாதி கடித்து விட்டு மிச்சமுள்ள பழத்தைப் பார்த்தாள். மஞ்சுவின் உடம்பில் அவளது காதலனின் கைரேகை இன்னும் இருப்பது போல தியாகு நினைத்து கொண்டான் . காதலை விட காமம் பெரிது என்று அவளுக்கு இப்போது தான் தெரிந்தது. தியாகு இந்த விசயத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. மஞ்சுவை கட்டில் இருந்து கீழே படுக்க சொன்னான்.

மஞ்சுவின் புனித மற்ற செயல் தியாகுவிற்கும் அவன் அலுவலகத்தில் வேலை புரியும் பெண்ணுக்கும்  உறவில் புனிதத்தை ஏற்படுத்தியது. மஞ்சுவிற்க்கும் தியாகு விற்க்கும் உள்ள பிரிவு  நாளடைவில்  நீதி மன்றத்தில் முடிந்தது.

மஞ்சு மீண்டும் தன் பிறந்த வீட்டிற்கே வந்தாள்.  தியாகுவும் செயல்களை சமுகம் அறிந்தாலும் இவள் பெண் என்பதால் இவளை மட்டுமே சமுகம்  ஏசியது. சமுகம் மும் கடவுளும் கற்பு என்ற வைர ஒட்டியாணத்தை பெண்ணின் வயத்தில் மட்டுமே கட்டியது. மீண்டும் அவளது பெற்றோர்கள் அவர்களின் கௌரவத்தை பற்றி கவலை படுவதை அவள் உணர்ந்தாள். அருனின் நியாப்பகமும் வந்தது, ஆனால் அவனும் ஆண் என்பதால் அவனும் தியாகுவைப் போல தான் நடந்து இருப்பான் என நினைத்துக் கொண்டாள். அந்த வீடும் அவளுடையது இல்லை என்பது அவள் பெற்றோரின் முகங்களில் தெரிந்தது. அவள் பைலையும் ஜெயகாந்தனையும் எடுத்து கொண்டு நடந்தாள். எண்ணங்கள் அவளை சாலையில்  நகர்த்தி சென்றது. திடிரென வாந்தி வருவது போல் இருந்தது. தானாக ஓடிப் போய் ஒரு மரத்தின் அருகில் வாந்தி எடுத்தாள். பக்கத்தில் ஒரு நாயும் அதன் குட்டியும் சாலையில் கிடந்தன.
அவளது கண்கள் களங்கின. உறவுகள் தொடர்கதை.

கார்த்திக் ராஜ்.

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது