திரு மணம்

 அபிராமியின் இந்த இரவும் அடுத்தவனுக்கு இன்பத்தை தந்து கொண்டு இருக்கிறது. அறைக்கு வெளியில் தன் மகள் ஆனந்தி தூங்கிக் கொண்டிருந்தாள். அதனால் முடிந்த வரை சத்தம் அறையின் வெளியே செல்லாத படி அபிராமி பார்த்துக் கொண்டாள். இவனின் முகம் இப்போது தான் அபிராமிக்கு நியாப்பகம் வந்தது. இவனும் ஒரு நாள் தன்னை முகத்துக்கு முன்னால் ரசித்து விட்டு முகத்துக்கு பின்னால் கிண்டல் செய்தவன். பல ஆண் தாசிகளும், வாய்ப்பு கிடைக்காத பத்தினி களிடையே அபிராமி தாசியாக ஆனாள்.


அபிராமி சாதி மாறி காதல் திருமணம் செய்து, இரு வீட்டார் துணையும் இன்றி அனாதையாக இந்த ஊரில் வாழ்க்கையை தொடங்கியவள். அவர்கள் பெற்றோரின் ஆசை படி அவள் வாழ்க்கையும் அழிந்தன. அவள் மகள் உலகத்தை பார்ப்பதற்குள் அவன் கணவன் உலகத்தை விட்டு சென்றான். அவள் தொழிலுக்கு சென்ற இடமும், அவள் இருந்த தெருவும் அவளை தாசியாக மாற்றி பின்பு  தாசியாக அவளை அறிமுகமும் செய்தது. இதைவிட பெரிய சோகம் அவள் மகள் மனநிலை வளர்ச்சி பாதிக்கப்பட்டவளாக  பிறந்தாள். அவளுக்கு உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய எண்ணம் எப்போதும் இருக்கும் ஆனால் எதுவும் அறியாத அவள் மகளையும் கொள்வதற்கு அவளால் முடியாது. அதைவிட இந்த தொழில் பெரிய வலியை கொடுப்பதில்லை என்று அவள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தாள். அவள் மகள் வயதுக்கு வந்த நாட்களும் கடந்தன. அவள் மகளுக்கு வயது ஆவதை விட தான் வயது ஆவதை பற்றிய கவலை அபிராமிக்கு அதிகமாக இருந்தது. இனிமேல் எப்படி சம்பாதிப்பது என்ற எண்ணம் அவளுக்கு இருந்து சிறிய இரவையும் கெடுத்தது.


வந்தவனுடைய இன்பம் முற்றிலுமாக நிறைவேறியதால், நல்லவன் என்ற சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு புறப்பத்தான். தன் மகள் கவனிக்காத படி அவனை மெல்ல வெளியே அனுப்பினாள். ஆனந்திக்கு தெரிந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை என்றாலும் அவள் எப்போதும் போல இன்றும் பயந்தாள். சுற்றி முற்றி பார்த்து அபிராமி வர சொல்ல அவன் வெளியே வந்து தொடை நடுங்கிய படி நடந்தான். எடுத்த வீடு அபிராமியின் கண்ணில் இன்றும் பட்டது.

அது திருவின் வீடு. அவன் அரசு பணியில் இருக்கிறான் என்பதும்,  அவனுக்கு இரண்டு மனைவிகள் என்பதும், அவர்களும் எங்கோ வேலையில் இருக்கிறார்கள் என்பதும்,  அவர்களுக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை இருக்கிறது என்பதும், அவன் இந்த ஊருக்கு வந்து சில வருடங்களே ஆனாது என்பது மட்டும் தான் அபிராமிக்கு தெரியும்.  அபிராமிக்கு திருவின் மீது ஒரு பெரிய மரியாதை இருந்தது. இந்த ஊரில் அவன் மட்டும் தான் அவளைப் பார்த்து முகத்துக்கு நேராக சிரிக்கும் தைரியம் உள்ளவன். அந்த சிரிப்பில் ஒரு மரியாதை இருக்கும். திரு அவளிடம் மட்டும் இல்லை அனைவரிடமும் மரியாதை யாக பேசும் குணம் உடையவன் என்பதும் அவளுக்கு தெரியும். அவனின் மனைவிகள் இவள் வீட்டிற்கு வந்து அவளிடமும் அவள் மகள்ளோடும் பேசும் குணம் உடையவர்கள். ஆனால் அபிராமி திருவின் வீட்டிற்கு செல்ல மாட்டாள். அந்த தெருவில் உள்ள வரில்  திருவின் கால் மட்டும் தான் தன் வீட்டை மிதித்தது இல்லை என்பது அபிராமிக்கு மட்டுமே தெரியும்.

அந்த தெருவில் இருப்பவர்களின் கேலிக்கையை நிறைவேற்றும் வீடாக அபிராமியின் வீடும் திருவின் வீடும் இருந்தது. அந்த தெருவில் உள்ள ஆண்கள் திருவின் மீது பொறாமை கொள்ளும் நிலை இருந்தது. இந்த காலத்திலும் இரண்டு மனைவிகளை வைத்து கொண்டதே அதற்கு காரணம். அந்த தெருவில் உள்ளவர்கள் இந்த இரண்டில் யார் இரண்டாவது என்பதையும், அந்த குழந்தை யாருடையது என்பதையும் கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்தனர்.   அங்குள்ள உத்தம ஆண்களால் திரு ஒரு பெண் பைத்தியம் பிடித்தவனாக கருதப்பட்டான்.

ஊர் கருதுவதை போல் அவனுக்கும் அவன் வீட்டில் உள்ள பெண்களுக்கும் திருமணம் எதுவும் ஆக வில்லை. அந்த வீட்டில் இருக்கும் பையனும் தத்தெடுக்கப்பட்ட குழந்தை. திரு தனக்கு பிடித்தவர்கள் மனைவியாய் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவன். திருமணத்தின் மீதும் பெரிதாக நம்பிக்கை இல்லாதவன்.அவனுக்கும் அந்த பெண்களுக்கும் இடையே அன்பு மட்டுமே இருந்தது, அந்த அன்பினால் மூவரும் ஒரே வீட்டில் இருந்தனர். இவை அனைத்தும் அந்த வீட்டில் உள்ள மூவருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. இதை அவர்கள் யாரிடமும் சொல்வதும் இல்லை, இரண்டு மனைவிகளுடன் வாழ்வதை விட இதை இன்னும் கேவலமாக இந்த சமுதாயம் பார்க்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு அதிகமாக இருந்தது.

அங்குள்ள பெண்கள் தன் கணவனை அபிராமியிடம் இருந்து காப்பாற்றுவதாய் நினைத்தும், ஆண்கள் தன் மனைவியை திருவிடம் இருந்து காப்பாற்றுவதாய் நினைத்தும் தன் இல்வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தனர்.

காலம் செல்ல அபிராமி நோயால் படுத்தப் படுக்கை ஆனால். இப்போது தன் பக்கத்தில் படுக்க யாரும் இல்லை என்ற இன்பம் இருந்தாலும், தன் மகளை இனிமேல் யார் பார்த்துக் கொள்வார் என்ற கவலையே அதிகமாக இருந்தது. அபிராமியின் நோயை பற்றி தெரிந்தவர்கள் அனைவரும் மிகுந்த பயத்தில் வாழ்ந்தனர். அடிக்கடி திரு வீட்டு உணவு இவள் கட்டில் வரை வந்தது. இப்போதாவது நாம் இருவரும் இறந்து விடுவோம் என்ற எண்ணம் அபிராமிக்கு வருவதற்குள் அவள் படுக்கை மண்ணுக்குள் நிரந்தரமாணது . அந்த தெருவில் உள்ள ஆண்களின் கைகள் கருணையின்றி ஆனந்தி மேலும் பட நினைத்தது.

ஆனந்தி திருவின் வீட்டில் வளர்ந்தாள். அவளையும் திரு மணம் செய்துக் கொண்டான் பொம்பல பொறுக்கி என ஊர் தன் பேச்சை மீண்டும் தொடங்கியது.

கார்த்திக் ராஜ்

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது