பிரிவுகள்

 




ஒரு காலத்தில்  மகிழ்சியக இருந்த நினைவுகள் இப்போது வலிகளாகவே இருக்கிறது. எந்த உறவும் பிரிவதற்காகவே என்ற உண்மை உணர்ந்த பிறகு.

***
நட்பின் எல்லையை அளவிடுவது கடினம் என்று நினைத்தேன் , நன்பர்களுக்கு திருமணமாகும் வரையில்.

***

எல்லா திருமணத்திலும் நன்பர்களின் தொப்புள்க்கொடி அருகதான் செய்கிறது, பலருக்கு அந்த தொப்புள்க்கொடியின் தடையங்கள் மறையவும் செய்கிறது, ஆனால் சிலருக்கு அது வடுவாகவே இருக்கிறது.

***


அருணும் அவன் நண்பனும் ஒன்றாக வளர்ந்தனர். அந்த நண்பனின் மீது மிகப்பெரிய பாசம் அருணுக்கு இருந்தது.
காரணம் அந்த நண்பனின் நட்ப்பால் அருணுக்கு பல உறவுகள் கிடைத்தன. அவைகளே உலகம் எனவும் இருந்தான். பின்பு சில உலகங்கள் தனக்கான உலகத்தை உண்டாக்கிக் கொண்டன, சில உலகங்கள் அருணின் கண் முன்னே மெலிந்து கொண்டு இருந்தன, சில உலகங்களின் உடல் நிகழ் உலகத்தை விட்டு நீங்கின, எப்போழுதும் கேட்டுக் கொண்டிருக்கும் உலகத்தின் ஓசை  அமைதியானது, சில சமயங்களில் அந்த உலகங்கள் அருணை அனாதையாக வும் எண்ண வைத்தது. இதற்கு எல்லாம் காரணம் அருணின் நண்பன் என்று அவனுக்கு புரிய வந்தது. 
அதனால் அந்த நண்பனின் மீது அருணுக்கு கோவமும் வெறுப்பும் வந்தது. அவன் நண்பனால் பின் நாளில் பல உலகங்கள் கிடைப்பதாய் இருந்தாலும் அருணுக்கு அந்த வெறுமை தீரவில்லை. அவனை நீங்க முடியாததால் வெறுப்போடு அருணின் வாழ்க்கை அந்த நண்பன் கூடவே நகர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த நண்பன் தன் அனைத்து உலகங்கள் கூடவும் இருப்பதை நினைத்து அருண் மனம் வாடினான்.

அவன் நண்பனின் பெயர் வயது.

கார்த்திக் ராஜ்
 

Comments

Popular posts from this blog

இப்பொழுதும்

முப்பது வயது

தொலைத்தது