மாதவிடாய்
ஏன் இந்த வலி,
என்றோ கேட்க்க இருக்கும்
குழந்தையின் அழுகைக்கா
ஏன் இந்த வலி,
தன்னவனின் சுயநல காமத்திற்க்கா
ஏன் இந்த வலி,
கருவரை கடவுள் தடுப்பதற்க்கா
ஏன் இந்த வலி,
தனிமையின் ஏக்கத்திற்க்கா
ஏன் இந்த வலி,
கருனைக்கு மாறாக கூச்சத்திற்க்கா
கடவுளும் சமத்துவத்தை விரும்பாததாலோ
இந்த வலியை பெண்ணுக்கு
தந்தானோ
***
ஒருவேலை கடவுள் மனிதனால் உருவாகமல் ஒரு பெண்ணால் உயிர்க்கொண்டால் மாதவிடாயின்
வலி புரிந்திருக்கும்,
ஆனால் பெண்ணால் உருவான ஆணும்
அதை அழுக்காய் பார்க்கும் மனநிலை தான் அழுக்கானது.. ஆண்களினால் உருவான ஆன்மிகம் கற்புக்கு தூய்மையும் மாதவிடாய்க்கு அசுத்தமும் தந்து பெண்ணை அடிமைபடுத்தியது. இன்று உடன்கட்டை ஏறுவது எப்படி பாவமோ அப்படிதான் பெண்ணை அசூத்தம் என்று கடவுளின் பெயரால் ஒடுக்கிவைப்பது..
#மனதூய்மையேஆன்மிகம்
கார்த்திக்ராஜ்
Comments
Post a Comment